மலையாளத்தில் ஒரு அடார் லவ் படத்தின் ட்ரைலர் மூலம் ஒரே நாளில் இந்தியா மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். அவர் கண் சிமிட்டும் அழகு அனைவரையும் நன்றாக கவர்ந்துள்ளது.
இந்த கட்சி மூலம் ஒரே நாளில் பிரபலமானார். அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். மேலும் அவரது இன்ஸ்டாகிராமிலும் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பிரியா வாரியர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அதிக அளவில் பார்வையாளர்கள் மற்றும் லைக்ஸை பெற்றுள்ளது. அந்த வீடியோவில் ஒரு அடார் லவ் படத்தின் ஒளிப்பதிவாளர் சீனு சித்தார்த்துடன் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ தான் இது.
ஒளிப்பதிவாளர் முத்தம் கொடுக்க அருகில் சென்று, அவர் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கிறார். இறுதியில் பிரியா வாரியரை முத்தம் கொடுக்காமல் ஏமாற்றிவிடுவார். இதனால் பிரியா வாரியார் ஏக்கத்துடன் பார்க்கிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 15 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். பல லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.