கர்நாடகத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றி பெரிய கட்சியாக பாஜக விளங்கியதால் அக்கட்சியின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடியூரப்பாவிற்கு 2017ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி கவர்னர் முதல்-மந்திரியாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க நிரூபிக்க முடியாததால் மூன்றே நாட்களில் அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார் கவர்னர்.
அதையடுத்து தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமியின் தலைமையிலான அரசு தோல்வியடைந்தது இதனால் தற்போது நான்காவது முறையாக எடியூரப்பா முதல்-மந்திரி ஆகிறார் நாளை வியாழக்கிழமை அவர் பதவி ஏற்பார் என தெரிகிறது.
நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக தான் ஆட்சி செய்கிறது. ஆனால் அக்கட்சிக்கு தென் மாநிலங்களில் ஆட்சி இல்லையே என்ற குறை இருந்தது அந்த குறையை தற்போது தீர்ந்துள்ளது. தென்இந்தியாவில் கர்நாடகத்தில் ஆட்சி அமைகிறது இதனால் பாஜக தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.