தமிழகத்தை குறிவைத்த பாஜக.?

ஜே.பி. நட்டா பாஜகவின் புதிய செயலாளராக பொறுப்பேற்ற பிறகு இந்தியா முழுவதும் தங்கள் கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார். அதன்படி 100 பேரவை உறுப்பினராக சேர்பவர்க்கு தீவிர உறுப்பினர் என்ற அந்தஸ்து வழங்கப்படும்.

தீவிரமாக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு கட்சியில் பதவி வழங்கப்படும். இதனால் இந்தியா முழுவதும் பாஜக தலைவர்கள் பரபரப்பாக களத்தில் இறங்கிய உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் எஸ்வி சேகர் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி முகாம்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில் பாஜகயின் தேசிய செயல் தலைவர் H. ராஜா உறுப்பினர் சேர்க்கைக்காக களத்தில் இறங்கவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் பாஜக கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நிர்வாகிகள் தீவிரமாக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.