சாப்பாட்டு மேஜையில் வைக்கப்பட்டிருந்த தட்டு ஒன்றிலிருந்து, ஒரு இறைச்சித் துண்டு நகர்ந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ப்ளோரிடாவைச் சேர்ந்த Rie Phillips என்பவர் பபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ள அந்த வீடியோ நான்கு மில்லியன் முறைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஒரு உணவகத்தின் மேஜையில், சாப்பாட்டுக்கு அருகில் ஒரு தட்டில் பச்சை இறைச்சியும் வைக்கப்பட்டுள்ளது.
திடீரென அந்த தட்டிலிருந்து நீளமான ஒரு துண்டு இறைச்சி முன்னோக்கி நகர்கிறது. ஏதோ ஒரு தலையில்லா விலங்கு நகர்வதுபோல் நகரும் அந்த துண்டு தட்டிலிருந்து கீழே விழ, அதைக் கண்டு ஒரு பெண் பயந்து அலறுகிறார்.
பின்னர் மீண்டும் நகரும் அந்த இறைச்சித் துண்டு, மேஜையிலிருந்தே கீழே விழ, மீண்டும் அந்த பெண் அலறுகிறார்.
அந்த வீடியோ வைரலாகியுள்ள அதே நேரத்தில், சிலர் அது போலியானது, அது ஒரு துண்டு நூலுடன் இணைக்கப்பட்டு அவ்விதம் நகர்த்தப்படுகிறது என்று கூறியுள்ளனர்.
வேறு சிலர், அது உயிருடன் இருக்கும்போதே தோலுரிக்கப்பட்ட ஒரு தவளையின் மாமிசமாக இருக்கலாம் என்கின்றனர்.
Jodinna Bartlett என்பவர், அது பெரும்பாலும் தோலுரிக்கப்பட்ட ஒரு தவளையின் உடலாகத்தான் இருக்க வேண்டும், ஜப்பான் போன்ற நாடுகளில் அது சர்வசாதாரணம், பாவம் அந்த உயிரினம் என்கிறார்.