14 வயது சிறுமியின் கொடூர கொலை: வெளியான குற்றவாளியின் கொடூர பின்னணி…

லண்டனில் 14 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி சுத்தியலால் அடித்துக் கொன்ற வழக்கில், முதன் முறையாக குற்றவாளியின் கொடூர பின்னணி வெளியிடப்பட்டுள்ளது.

லண்டனில் 14 வயதேயான விக்டோரிஜா சோகோலோவா என்ற சிறுமி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில் பூங்கா ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது மண்டை ஓடு சிதைக்கப்பட்டிருந்தது, முதுகெலும்பு உடைக்கப்பட்டிருந்தது. உடற்கூறு ஆய்வில், அந்த சிறுமி கொடூரமாக துஸ்பிரயோகத்திற்கு இரையானதும் தெரியவந்தது.

இந்த வழக்கில் கைதான 17 வயது இளைஞருக்கு அதிகபட்ச தண்டனையாக 19 ஆண்டுகள் சிறை வாசம் விதிக்கப்பட்டது.

சிறையில் இருக்கும் அந்த இளைஞரின் பெயர் அய்மான் அஜீஸ் என மட்டுமே ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,

தற்போது முதன் முறையாக அந்த இளைஞரின் புகைப்படம் மற்றும் பின்னணி வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை அவரது புகைப்படம் மற்றும் தகவல்களை வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஊடகங்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, தற்போது அந்த தடையை நீக்கியுள்ளனர்.

அஜீஸ் கொலைக்கு பயன்படுத்தியதாக கூறும் சுத்தியலை விசாரணை அதிகாரிகள் இதுவரை தேடி வருவதாக கூறப்படுகிறது.

நீதிமன்ற விசாரணையின்போது குற்றவாளி அஜீஸ் எந்த வருத்தமும் தெரிவிக்க முன்வரவில்லை என கூறும் நீதியரசர்,

அந்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்க திட்டமிட்டது மட்டுமின்றி கொடூர ஆயுதத்தால் கொலை செய்ததும் இதில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பேஸ்புக் நண்பரான சிறுமி விக்டோரிஜாவை ஆசை வார்த்தை கூறி வெஸ்ட் பார்க், வால்வர்ஹாம்டன் பகுதிக்கு வரவழைத்துள்ளார் அய்மான் அஜீஸ்.

தொடர்ந்து அந்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி, கொலையும் செய்த பின்னர், அவரது செல்போனை ஏரியில் வீசிவிட்டு அங்கிருந்து மாயமாகியுள்ளார்.

ஆனால் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் இந்த காட்சிகள் சிக்கியதால் அய்மான் அஜீஸ் கைது செய்யப்பட்டார்.