கனடாவில் பெண்மணி ஒருவரை ஏமாற்றி பெரும் தொகை கொள்ளையிட்ட வாகன் பகுதி இளம்பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கனடாவில் டேட்டிங் இணையதளம் மூலம் 60 வயது பெண்மணிக்கு 24 வயது இளம்பெண் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அவர் தம்மை டொராண்டோ பகுதியில் குடியிருக்கும் செல்வாக்கு மிகுந்த கட்டிடக் கலைஞர் என அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
இருவரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் என கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவரிடம் இருந்து அந்த 24 வயது இளம்பெண் சுமார் 291,000 டொலர் தொகையை பல கட்டங்களிலாக கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
தமது பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த அவர் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.
இவரின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த 24 வயது பெண் உண்மையில் கட்டிடக் கலை நிபுணர் அல்ல என விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து மோசடி வழக்கில் அவரை புதனன்று கைது செய்துள்ள பொலிசார், இந்த மோசடியில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் எனவும்,
விசாரணைக்கு பின்னரே இதன் பின்னணி தொடர்பில் தகவல் வெளிவரும் என தெரிவித்துள்ளனர்.