கண்டி – தல்வத்தை பிரதேசத்தில் 9 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
எனினும் மாணவியை கடத்திய நபரை சில நாட்களின் பின்னரே குடும்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டி – தல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 9 வயதான மாணவியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்தி சென்றுள்ளார்.
கண்டி தனியார் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி பேருந்தில் இருந்து இறங்கி வீடு செல்லும் போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் மாணவியின் கால் பாத அடையாளங்களை வைத்து மாணவியை கொண்டு சென்றுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
நுட்பமான முறையில் செயற்பட்ட குடும்பத்தினர் மாணவியை காப்பாற்றியுள்ளனர். அத்துடன் இன்றைய தினம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.