தமிழகத்தில் பெண்ணை கொலை செய்து சடலத்தை கழிவுநீர் தொட்டிக்குள் மறைத்து வைத்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மனைவி சுலோச்சனா (43). இவர் சமீபத்தில் மாயமான நிலையில், எங்கு சென்றார் என தெரியாமல் இருந்தது.
இதனிடையில் திருச்சியில் இருந்து விருந்துக்கு வந்திருந்த கிருஷ்ணமூர்த்தியின் சித்தப்பா மகனான ரமேஷ் என்பவர், அங்குள்ள டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு தான் ஒரு கொலை செய்து விட்டதாக புலம்பியபடியே காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்
பொலிசாரின் விசாரணையில், சுலோச்சனாவின் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் சுலோச்சனாவுக்கும், ரமேஷுக்கும் முறையற்ற பழக்கம் இருந்து வந்துள்ளது.
ரமேசுக்கு மனைவியும் இரு பெண் குழந்தைகளும் இருக்கும் நிலையில், வாரந்தோறும் சுலோச்சனாவை தேடிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளான்.
வேலூர், ஓட்டேரி அடுத்த இந்திரா நகர் பகுதியில் சுலோச்சனாவின் மருமகனுக்கு சொந்தமான வீடு உள்ளது. இங்கு வைத்துதான் சுலோசனாவை ரமேஷ் ரகசியமாக சந்தித்து வந்துள்ளான்
தனது பெயரில் உள்ள வீடு மற்றும் சொத்துகளை எழுதி வைப்பதாக சுலோச்சனாவிடம் ஆசை வார்த்தை கூறி வந்துள்ளான் ரமேஷ்,
இந்த நிலையில், சம்பவத்தன்று ரகசிய சந்திப்பு நடந்தபோது ரமேஷ்- சுலோச்சனா இடையே சொத்து தொடர்பான பேச்சு எழுந்துள்ளது.
தனது பெயருக்கு சொத்துக்களை மாற்றிக் கொடுத்தால் தான் இனி சந்திக்க முடியும் என்று கூறி சுலோச்சனா புறப்பட்டதால் ரமேஷுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, அங்கு கிடந்த இரும்புக் கம்பியால் சுலோச்சனா தலையில் பலமாக அடித்துள்ளான் ரமேஷ். ரத்த வெள்ளத்தில் மயங்கிச் உயிரிழந்த சுலோச்சனாவின் சடலத்தை வீட்டில் உள்ள கழிவறைத் தொட்டியில் வீசி மறைத்து விட்டு சென்றதாகக் கூறினான்.
இதையடுத்து சுலோச்சனாவின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு ரமேஷை பொலிசார் கைது செய்துள்ளனர்.