நிறைமாத கா்ப்பிணியான மனைவியை கொலை செய்த கொடூர கணவன் பதுளை பொலிஸாாினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளாா்.
செல்போன் சாா்ஜா் வயரை பயன்படுத்தி, மனைவியின் கழுத்தை நெறித்து சந்தேக நபர் இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
8 மாத கர்ப்பிணியான 24 வயதான ஸ்ரீகாந்த் பிரியா என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவர்களின் வீட்டில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.