மகாராணிக்கு யாரை அதிகம் பிடிக்கும் வில்லியமையா, ஹரியையா: வெளியான தகவல்!

சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்று, பிரித்தானிய மகாராணியாருக்கு தனது பேரப்பிள்ளைகளில் யாரை அதிகம் பிடிக்கும், வில்லியமையா, ஹரியையா என்ற கேள்விக்கான பதிலை கணிப்பதற்கு உதவியுள்ளதாக மகாராணியாரின் ரசிகர்கள் கருதுகிறார்கள்.

புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள போரிஸ் ஜான்சன் மகாராணியாரை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், மகாராணியாரின் ரசிகர்கள் ஒரு சிறிய, ஆனால் சுவாரஸ்யமான தகவலைக் கண்டுபிடித்தார்கள்.

அந்த புகைப்படத்தை ஸூம் செய்து பார்த்த சிலர், மகாராணியார் தனது மேஜையில் குடும்பப் படங்களை அடுக்கி வைத்திருப்பதை கவனித்தார்கள்.

அதில் ஹரி மேகன் இருக்கும் படம், வில்லியமும் கேட்டும் இருக்கும் படத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கவனித்துள்ளார்கள்.

உடனே ஆளாளுக்கு அது குறித்த தங்கள் கருத்துக்களை குவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மகாராணியார் ஹரியின் படத்தை வில்லியம் படத்திற்கு முன்னால் வைத்திருப்பதற்கு ஒரு சுவாரஸ்ய காரணம் இருக்கிறது என்று கூறியுள்ள ஒருவர், எனது பாட்டியார் எப்போதும் தனக்கு பிடித்த பேரக்குழந்தைகளின் படத்தைத்தான் முன்னால் வைப்பார் என்று கூறியுள்ளார்.

அந்த புகைப்படங்களை அடுக்கி வைப்பதில் ஒரு முக்கிய விடயம் இருக்கிறது என்று கூறும் இன்னொருவர், நிச்சயம் மகாராணியார் தனக்கு வில்லியம் கேட்டை விட, ஹரி மேகனைத்தான் பிடிக்கும் என குறிப்பாக காட்டியுள்ளார் என்கிறார் .