சிரியாவில் உயிருக்கு போராடிய நிலையிலும் தன்னுடைய தங்கையை காப்பாற்றியுள்ளார் ஐந்தே வயதான ரிஹாம்.
சிரியாவில் அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது.
இதில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக மற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இட்லிப் மாகாணத்தின் அரிஹா எனும் பகுதியிலுள்ள கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படைகள் தாக்குதல் நடத்தின.
இதில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், அம்ஜத் அல் அப்துல்லா என்பவரது வீடு நொறுங்கி போனது.
அப்துல்லாவும், அவரது மனைவி ஆஸ்மாவும் சம்பவ இடத்திலேயே பலியாக, 5 வயது மகள் ரிஹாம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அப்போதும்கூட தன்னுடைய 7 மாத தங்கை கீழே விழுந்துவிடாமல் இருக்க சட்டையை இறுகப்பிடித்துக் கொண்டிருந்தார்.
காயங்களுடன் குழந்தை உயிர் பிழைக்க, ரிஹாம் உயிரிழந்துள்ளார்.
இந்த புகைப்படம் வெளியாகி வைரலானதுடன் அனைவரின் நெஞ்சையும் பிசைந்துள்ளது.