கனேடிய திருநங்கை ஒருவர் அழகு நிலையங்கள் தன்னை அவமதித்ததாக மனித உரிமைகள் அமைப்பில் புகாரளித்திருந்த நிலையில், அவரது புகார் காரணமாக ஒரு அழகு நிலையமே நிரந்தரமாக மூடப்பட்ட சம்பவமும் நடந்தது.
வான்கூவரைச் சேர்ந்த திருநங்கையான Jessica Yaniv (32) தான் ஒரு திருநங்கை என்பதால் அப்பகுதியிலுள்ள பல அழகு நிலையங்கள் தனக்கு மெனிக்யூர், ஃபேசியல் மற்றும் வாக்சிங் செய்ய மறுப்பதாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் மனித உரிமைகள் கமிஷன் முன்பு புகாரளித்திருந்தார்.
ஆனால் தன்னை திருநங்கை என்று கூறிக்கொள்ளும் Yaniv, இதுவரை பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை, அதாவது உடல் ரீதியாக அவர் இன்னும் ஆணாகத்தான் இருக்கிறார்.
எனவே அவரால் புகாரளிக்கப்பட்டிருந்த ஒரு அழகு நிலைய உரிமையாளர், தனக்கு Yaniv ஒரு திருநங்கை என்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், ஆனால் தன்னால் ஒரு ஆணின் ஆணுறுப்பை வாக்சிங் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
Yaniv மற்ற திருநங்கைகளைப்போல பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தாரானால், நிச்சயம் அவருக்கு வாக்சிங் செய்திருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த கருத்திற்கு, மற்ற அழகு நிலைய உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் தனக்கு வாக்சிங் செய்ய மறுத்தது கூட பரவாயில்லை, ஆனால் அதை அவர்கள் கூறிய விதம் தன்னை அவமதிப்பதாக இருந்தது என்று கூறியிருந்தார் Yaniv.
இதற்கிடையில், இந்த வழக்கில் இவ்வளவு நாளும் Yanivஇன் பெயர் வெளியிடப்படாமலே இருந்தது.
தற்போதுதான் அவரது பெயர் வெளியிடப்பட்டுள்ளது. அவரது பெயர் வெளியானதுமே ஒரு இளம்பெண் அவர் மீது பாலியல் புகாரளித்துள்ளார்.
ஆகஸ்டு மாதம் வந்தால் 20 வயதை தொடும் Jessica Rumpel என்ற இளம்பெண், தான் 14 வயதாக இருந்தபோது, இதே Yaniv, Jonathan என்ற பெயரில் ஆணாக இருக்கும்போது, தான் சிறுமியாக இருக்கும்போதே தனக்கு பாலியல் ரீதியாக முறைகேடான குறுஞ்செய்திகள் அனுப்பியதாக புகாரளித்துள்ளார்.
Jessica புகாரளித்ததைத் தொடர்ந்து பலரும் அவர் மீது இதேபோன்ற புகாரளித்துள்ளனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள Yaniv, தனது பெயரில் யாரோ இவ்வாறு போலியாக செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் Jessica, Yanivஇன் தற்போதைய verified accountஇலிருந்து வந்துள்ள செய்திகளை வெளியிட்டு தனது குற்றச்சாட்டை உறுதி செய்துள்ளார்.