காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட நளினி…

ஒருமாத காலம் பரோலில் வெளிவந்துள்ள நளினி, சிறைத்துறை நிபந்தனைக்களுக்கு உட்பட்டு வேலூர் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக நளினி சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது மகள் ஹரித்ராவின் திருமணத்திற்காக ஒரு மாத காலம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி கடந்த வியாழனன்று காலை 10 மணியளவில் பரோலில் வந்த நளினிக்கு 12 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதில், தினமும் ஓருமுறை நேரில் ஆஜராகி வேலூர் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

முதல்நாளான நேற்று காலை 11.30 மணியளவில் காவல்நிலையம் வந்த நளினி கையெழுத்திட்டார், அரசியல் பிரமுகர்களையோ, செய்தியாளர்களையோ சந்திக்க கூடாது என்பதால் யாருடனும் அவர் பேசவில்லை.