தூக்கில் தொங்கிய கணவன்- மனைவி: அனாதையாய் தவிக்கும் குழந்தை!

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு 8 மாத ஆண் குழந்தையை தனியாக தவிக்க விட்டு சென்ற சம்பவம் நெட்டப்பாக்கம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் சிலிண்டர் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். (33). இவரது மனைவி ராஜாமணி (24).

இவர்களுக்கு அபினேஷ்வர் 8 மாதத்தில் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சரவணன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவி ராஜாமணியுடன் பலநாட்களாக தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அவ்வப்போது உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் நேற்று சரவணன் வழக்கம் போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு மனைவியுன் தகராறு செய்து வெளியே சென்று விட்டார்.

அதன்பின் வீட்டுக்கு வந்த போது ராஜாமணி அங்கு சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் சரவணன் தனது மைத்துனர் வீரமணிக்கு செல்போனில் நடந்த சம்பவத்தை கூறி தானும் வாழ விரும்பவில்லை என்றும், எனவே, தற்கொலை செய்து கொள்ளபோவதாகவும், தனது குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு செல்போனை ஆப் செய்து விட்டார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வீரமணி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, நெட்டப்பாக்கத்துக்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டில் குழந்தை மட்டும் அழுது கொண்டிருந்தது. சரவணன் மற்றும் ராஜாமணி ஆகிய இருவரும் தூக்கில் பிணமாக தொங்கினர்.

இதனை கண்டு வீரமணி மற்றும் உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

குறித்த சம்பவ இடத்திற்கு வந்த நெட்டப்பாக்கம் காவல்நிலைய போலீசார் கணவன், மனைவி இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.