பிரித்தானியா இளவரசி கேட் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக பிரபல மருத்துவர் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முனீர் சோம்ஜி, சமீத்தில் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார்.
அதில் இளவரசி கேட் படத்தை பதிவிட்டு, அவருடைய முகத்தை பாருங்கள். சிகிச்சைக்கு முன் முகத்தில் கோடுகள் தென்படும். சிகிச்சைக்கு பின் உள்ள மற்றொரு படத்தை பாருங்கள். அவை அனைத்தும் மறைந்திருக்கும் என பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அரண்மனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக அமெரிக்க பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அரண்மனை நிர்வாகம் இதுபோன்ற செயல்களை ஒரு போதும் ஆதரிக்காது என கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரண்மனை ரசிகர்களின் கடுமையான எதிர்ப்பால் மருத்துவர் தன்னுடைய பதிவை அந்த பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார். இளவரசி கேட் உங்களுடைய வாடிக்கையாளரா என்கிற கேள்விக்கு பதில் கொடுக்க மறுத்துள்ளார்.