கைகள், கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை தம்பசிட்டிப் பகுதியில், கைகள் கட்டப்பட்ட நிலையில் தோட்டக் கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பெண் யார் என்பது தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்த பெண்ணின் கைகள் கட்டப்பட்டுள்ளமையினால் இந்தச் சம்பவம் ஒரு கொலையாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.