விமானநிலையத்தில் மகனுடன் சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…

அமெரிக்காவில் சிறுவன் ஒருவன் விமானநிலைய கன்வேயர் பெல்ட்டில் ஏறி பயணம் செய்த சம்பவம் அதிகாரிகளை கதிகலங்க வைத்துள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இருக்கும் அட்லாண்டா விமானநிலையத்திற்கு 2 வயது மதிக்கத்தக்க, சிறுவனுடன் தாய் வந்திருந்தார்.

அப்போது அங்கு தாயுடன் சோதனைக்காக நின்று கொண்டிருந்த போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது பிடியிலிருந்து நழுவிய சிறுவன் எங்கே போனான் என்று தெரியவில்லை,

இதனால் அதிர்ச்சியடைந்த தாய், மகனை காணவில்லை என்று கூறி, அங்கிருந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின் அதிகாரிகள் அங்கிருந்த சிசிடிவி கமெராக்களை ஆராய்ந்து பார்த்த போது, சிறுவன் உடமைகள் செல்லும் கன்வேயர் பெல்டில் ஏறி சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியில் இருக்கும் அதிகாரிகளுக்கு சிறுவன் கன்வெயர் பெல்டில் வருது தெரிவித்ததால், உஷாராக இருந்த அதிகாரிகள், சுமார் 5 நிமிடம் ஒவ்வொரு கன்வேயர் பெல்டாக பயணித்த சிறுவன், இறுதியாக அதிகாரிகளால் மீட்கப்பட்டான்.

இதில் சிறுவனின் கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர், அவர்களை மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.