பிரித்தானியாவிலிருந்து மெக்ஸிகோவுக்கு புறப்பட்ட விமானத்தில் நடுவானில் கணவன், மனைவிக்கு இடையே மோதல் வெடித்ததால் விமானம் பெர்முடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து மெக்ஸிகோ புறப்பட்ட டியூஐ நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் மான்செஸ்டரை சேர்ந்த 42 வயதான எட்வர்ட் மோங்கன் தனது மனைவியுடன் பயணித்துள்ளார்.
திடீரென இருவருக்கும் மோதல் வெடிக்க, கோபமடைந்த மோங்கன், மனைவியின் முகத்தில் துப்பியுள்ளார். இதை தடுக்க வந்த விமானக்குழுவினரிடம் மோதலில் ஈடுபட்டு கீழே தள்ளியுள்ளார்.
இதனால், கவலையடைந்த விமானி வேறு வழியின்றி விமானத்தை அவசரமாக பெர்முடாவில் தரையிறக்கியுள்ளார். அங்கு வந்த பொலிசார் ரகளையில் ஈடுபட்ட மோங்கனை கைது செய்து பெர்முடா தலைநகர் ஹாமில்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மோங்கன், இனி இதுபோன்று செயலில் ஈடுபடமாட்டேன் என உறுதியளித்துள்ளார். இதனையடுத்து, விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட மோங்கனுக்கு 5,250 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.