காரில் குழந்தைகள் இருப்பதை மறந்துவிட்டு வேலைக்கு சென்ற தந்தை 8 மணி நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்துள்ள சோக சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த 39 வயது தந்தை தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் வீட்டிலிருந்து காரில் கிளம்பியுள்ளார்.
குழந்தைகள் இருவரும் காரின் பின் இருக்கையில் இருப்பதை மறந்த அவர், நேரடியாக பணிக்கு சென்றுவிட்டார்.
8 மணி நேரம் கழித்து திரும்பியதும், காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார். சிறிது தூரம் சென்றதும் எதார்த்தமாக பின் இருக்கையை பார்த்துள்ளார். அப்போது இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி கிடந்துள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், பொலிஸாருக்கு போன் செய்து உதவிகேட்டு கதறியுள்ளார்.
ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், குழந்தைகள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
வெப்பம் காரணமாக இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகித்திருக்கும் பொலிஸார், குழந்தைகளின் தந்தையையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.