பிக்பாஸில் கடந்த வாரம் மீட்டிங் ஏற்பாடு செய்த பிரச்சனை ஒன்று போய் கொண்டிருந்தது. அதாவது அப்போது கேப்டனாக இருந்த சாக்ஷி அனைவரையும் அழைத்து மீட்டிங் ஒன்றை போட்டார்.
ஆனால் மீட்டிங்கின் போது தான் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யவில்லை, மீரா சொல்லி தான் செய்தேன் என மாற்றி பேசினார். இதனால் அவருக்கு ஒரு குறும்படத்தை கமல் கடந்த வாரம் போட்டு காட்டினார்.
இந்நிலையில் கவீன் நேற்று சாக்ஷியிடம், உனக்கு மொழி பிரச்சனை உள்ளது. அதனால் நீ சுவாரஸ்யமாக நாட்டாமை டாஸ்க்கை செய்யவில்லை என கூற ஒரு கட்டத்தில் கை நீட்டி சாக்ஷியை அடிக்க சென்றுவிட்டார்.
ஆனால் இதுகுறித்து சாக்ஷி அவரிடம் பிறகு கேட்டப்போது தான் அதை பற்றி பேசவே இல்லை என கூறி சண்டை போட்டார். சாக்ஷியும் அழ ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் யார் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பிராது..! ?? #Day34 #Promo1 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/PfUzLi7AJN
— Vijay Television (@vijaytelevision) July 27, 2019
இதில் கவீன் உண்மையில் அப்படி தான் பேசியிருக்கிறார் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.