தமிழகத்தில் சென்னை விமானநிலையத்தில் சுமார் 53 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டுப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, துபாயில் இருந்து வந்த விமானங்களிலும், இலங்கை கொழும்புவில் இருந்து வந்த விமானங்களிலும் இருந்த மதுரையைச் சேர்ந்த நாசர்தீன், பதுருதீன், முகமது நஜிபுல்லா ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகல் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் ரப்பர் போன்ற பொருளில் தங்கத்தை பொதிந்து மலக்குடலில் தங்கத்தை கடத்தி வந்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 35 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 974 கிராம் கைப்பற்றப்பட்டது.
அதோடு, அவர்களிடமிருந்து 26 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்புள்ள் 2640 Gudang garam பிராண்டு சிகரெட்டுகள் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பயன்படுத்தபட்ட மடிக்கணினிகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.
அதே போன்று சனிக்கிழமை காலை எமிரேட்ஸ் விமானத்தில் வந்த துபாயைச் சேர்ந்த பிலிப் மற்றும் சேகர் என் இரு பயணிகளிடம் இருந்து 18 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஈரோ கரன்சிகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.