வாரத்திற்கு 600 பவுண்டுகள் ஊதியம்… சொகுசு வாழ்க்கை!

பிரித்தானியாவில் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் சுகர் லேடி தொழில் மூலம் வரத்திற்கு 300 முதல் 600 பவுண்டுகள் வரை பரிசாக பெறுவதாக தெரிவித்துள்ளார்.

லண்டனில் 30 முதல் 50 வயதுக்கு உட்பட்ட விவாகரத்தான மற்றும் செல்வந்தர்களுடன் மட்டும் டேட்டிங் என கூறும் 45 வயது சமந்தாவுக்கு 18 மற்றும் 25 வயதில் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

கணவரை பிரிந்து 3 வருடங்கள் தனியாக வாழ்ந்து வந்த சமந்தாவுக்கு சுகர் லேடி என்ற செல்வந்தர்களுடனான டேட்டிங் கலாச்சாரம் குறித்து அவரது நெருங்கிய தோழி ஒருவரே அறிமுகம் செய்துள்ளார்.

அதன் பின்னர் இது தொடர்பான இணையதளம் ஒன்றில் பதிவு செய்து கொண்ட சமந்தா தற்போது வாரத்திற்கு 600 பவுண்டுகள் வரை ஒரு ஆண் நண்பரிடம் இருந்து வசூலிக்கிறார்.

மட்டுமின்றி நட்சத்திர ஹொட்டல்களில் அவர்களுடன் விருந்துக்கு செல்கிறார். இவரது குடியிருப்புக்கான வாடகை கட்டணத்தையே அவர்களிடம் இருந்து பரிசாக பெறுகிறார்.

சமயங்களில், இவரது இதர செலவுகளையும் ஆண் நண்பர்களிடம் இருந்தே பெறுகிறார். இது தற்போதைய சூழலில் லண்டனில் குடியிருக்க தமக்கு பேருதவியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கட்டணம் வசூலித்துக் கொண்டு தேவை கருதி பாலியல் உறவுக்கு உடன்படுவதும், அக்கறை காட்டும் பணியையே சுகர் லேடி பெண்கள் செய்கின்றனர்.

இணையம் வாயிலாக அறிமுகம் செய்து கொண்ட பின்னர், இருவரும் புரிந்துகொள்ளும் பொருட்டு சில நாட்கள் தொடர்ந்து சேட் செய்கின்றனர்.

இருவருக்கும் மன ஒற்றுமை இருப்பதாக உணர்ந்தால், பின்னர் தொலைபேசி எண்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

பின்னர் ஏதேனும் ஒரு ஹொட்டலில் உணவுக்கு சந்தித்துக் கொள்கின்றனர். அங்கிருந்து அடுத்த கட்டத்திற்கு செல்கின்றதாக கூறுகிறார் சமந்தா.

ஏராளமான விவாகரத்து பெற்ற பெண்கள், பொருளாதார ரீதியாக மிகவும் அல்லல்பட்டு வருவது தமக்கு தெரியும் என கூறும் சமந்தா,

சுகர் லேடி உறவுக்கு அவர்கள் முயற்சிக்கலாம் எனவும் ஆலோசனைகள் வழங்குகின்றார்.

உலகம் எங்கும் இளம்பெண்களால் முன்னெடுத்துவரும் சுகர் பேபி கலாச்சாரம் கோலோச்சும் நிலையில், தற்போது திருமணமான பெண்களால் சுகர் லேடி கலாச்சாரமும் அடியெடுத்து வைத்துள்ளது.