OK OK, ராஜா ராணி, விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் காமெடி ரோலில் நடித்து பிரபலமானவர் ஜாங்கிரி மதுமிதா. இவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ளார்.
மதுமிதா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அவர் திருமணமான உடனே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துவிட்டாரா? என பல நாட்களாகவே கேள்வியெழுப்பப்பட்டு வருகின்றன.
அதெற்கெல்லாம் தற்போது விடை கிடைத்துள்ளது. அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளதால் அவர் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளாராம்.
முந்தைய சீசன்களிலும் மதுமிதாவை அழைத்தனர். ஆனால் அவர் நிராகரித்து வந்தார். மேலும் பிக்பாஸ் வீட்டில் ஒரு முறை கூட நான் எனது கணவரை மிஸ் செய்கிறேன் என்று அவர் கூறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.