இந்திய மாநிலம் மராட்டியத்தில் 16 ஆம் வயதில் கணவனால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண் ஒருவர் தமது வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
மராட்டிய மாநிலம் மும்பையில் தமது 16-வது வயதில் வீட்டு வேலைக்காக சென்றபோது தான் முதன்முறையாக தமது கணவரை சந்தித்துள்ளார்.
இருவரும் காதலித்துவந்த நிலையில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அடுத்த ஓராண்டில் இருவருக்கும் ஆண் பிள்ளை ஒன்றும் பிறந்துள்ளது.
வாழ்க்கை ஆனந்தமாக சென்றுகொண்டிருந்த ஒரு நாளில், கணவர் தம்மை சிவப்பு விளக்கு பகுதிக்கு அழைத்துச் சென்று, ஒரு அறையில் காத்திருக்க வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
சில மணி நேரமான நிலையில், அறைக்கு வெளியே செல்ல முயன்ற தம்மை திடகாத்திரமான ஒருவர் வழிமறித்து,
கணவர் தம்மை வெறும் 40,000 ரூபாய்க்கு விற்ற கதையை கூறியபோது, தமக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது என தெரிவித்துள்ளார்.
அந்த தொகை முழுவதும் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற முடியாது என அறிந்த அடுத்த 8 நாட்கள் தொடர்ந்து அழுது புலம்பியதாக அவர் பகிர்ந்துள்ளார்.
9-வது நாள் முதன் முறையாக வாடிக்கையாளருடன் படுக்கை பகிர்ந்து கொண்டதாக கூறும் அவர், அதன் பின்னர் பணம் சேகரித்து அங்கிருந்து தப்ப வேண்டும் என்ற வெறியில் 7 மாத காலம் அனைத்தையும் பொறுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த 7 மாத காலத்தில் தம்மால் 25,000 ரூபாய் மட்டுமே திரட்ட முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மாயமான கணவர் ஒருநாள் தாம் தங்கியிருக்கும் அறைக்கு வந்தார். தம்மை அழைத்து செல்லவே வந்துள்ளதாக கருதிய நிலையில், தாம் இதுவரை சேமித்த பணம் முழுவதும் அள்ளிக்கொண்டு அவர் மாயமானது பேரிடியாக அமைந்தது என்றார் அவர்.
வாழ்க்கை மீண்டும் பாலியல் தொழிலாளியாகவே நீடித்தது. அப்போது ஒருமுறை தம்மை சமீபித்த வாடிக்கையாளர் ஒருவர்,
தம்மை அங்கிருந்து காப்பாற்றுவதாகவும், திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் உறுதி அளித்துள்ளார்.
அந்த உறுதியில் அந்த நபருடன் ஏற்பட்ட உறவில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயானதாக கூறும் அவர்,
ஒருகட்டத்தில் தமக்கு வாழ்க்கை அளிப்பதாக உறுதி அளித்தவருக்கு ஏற்கெனவே மனைவியும் பிள்ளைகளும் இருக்கும் கதை தெரியவந்து என்றார்.
தற்போது மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான தாம், அவர்களை நல்ல நிலையில் சேர்ப்பிக்க வேண்டும் என்ற கவலை தொற்றிக்கொண்டது என கூறும் அவர்,
தமது வசதிக்கு ஏற்ற பாடசாலைகளை அணுகினாலும், பாலியல் தொழிலாளியின் பிள்ளைகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் மறுத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தொண்டு நிறுவனம் ஒன்றை சமீபித்து தமது நிலையை அவர்களிடம் விளக்கிய நிலையில், அவர்கள் பணம் சேகரித்து தந்ததாக தெரிவித்துள்ளார்.
அன்று முதல் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை கைவிட்ட அவர், அதன் பின்னர் பல துன்பங்களை அனுபவித்துள்ளார்.
பசியை போக்க தெருக்குழாய் தண்ணீர் குடித்தும், பிள்ளைகளுக்காக பிச்சை எடுத்தும் காலத்தை ஓட்டியுள்ளார்.
அந்த வாழ்க்கையில் இருந்து தம்மை மீண்டும் கைதூக்கி விட்டது அந்த தொண்டு நிறுவனம் என கூறும் அவர்,
தற்போது 15 ஆண்டுகளாக பாலியல் தொழிலாளிகள் எவ்வாறு பாதுகாப்பான உறவில் ஈடுபட வேண்டும் எனவும், அவர்களின் ஆரோக்கியம் தொடர்பிலும் வகுப்புகள் எடுத்து வருகிறார்.