வேலூர் தேர்தலில் யாருக்கு ஆதரவு.?

திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மத்திய மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன், “ஆரணி வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் குறித்து பேசியபோது பெரிய அளவில் யார் மீதும் குறை கூறவில்லை.

ஆனால், சில நிர்வாகிகளிடம் முரண்பாடுகள் இருந்தது. அவர்கள் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆர்கே நகர் தேர்தலுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றி வருகின்றேன். தலைமை கழக நிர்வாகிகள் மட்டுமின்றி மாவட்ட நிர்வாகிகள் பெற அணி செயலாளர் தொண்டர்கள் என அனைவரையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றேன். எவரும் எனக்கு எந்த தகவலும் தெரியாது என நினைத்துக் கொள்ள வேண்டாம்.

நமது கட்சியினரை உள்ளாட்சித் தேர்தலில் சீட்டு தருகிறேன் என அதிமுகவினர் இழுக்க பார்க்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல் என்ற ஒன்று நடக்குமா என்பதே சந்தேகம்தான். அதிமுக வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுகின்றது. அதிமுக அமைச்சர்கள் தற்போது ஆள் பிடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இரண்டு அமைச்சர்கள் சிலை கடத்தல் தொடர்பாக தலையீடு இருப்பதாக பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

கோர்ட்டில் யாரும் பொய் சொல்லி விளையாட முடியாது என்பது அவருக்கே தெரியும். ஆறாம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று. புதிய கல்விக் கொள்கையில் என்ன அம்சங்கள் அமைக்க வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவித்த இருக்கின்றோம். மாற்றங்கள் செய்தால் தான் வாழும் காலத்தில் மாணவர்கள் படிக்கும் படிப்பு பயனுள்ளதாக இருக்கும்.

கர்நாடகத்தில் நடைபெற்றிருப்பது ஜனநாயகப் படுகொலை என்பது மக்களின் கருத்து. வேலூர் பாராளுமன்ற தேர்தலில் நான் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது. விவசாய நிலங்கள் காடுகள் நீராதாரங்கள் விவசாயிகளை அழைத்து தான் ரோடு உருவாக்கிய முன்னேற வேண்டும் என்று நாட்டிற்கு அவசியம் இல்லை.

8 வழி சாலை திட்டம் கைவிடப்பட்டு, ஏற்கனவே, இருக்கின்ற சாலைகள் அகலப்படுத்தப்படும் உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் நாங்கள் போட்டியிடுவோம். மக்கள் விரும்பாத திட்டங்களை அரசு கொண்டுவரும் நினைக்கின்றது. மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசாங்கம் முனைப்புக் காட்டுவதாகத் தெரியவில்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.