12 இஸ்ரேலிய இளைஞர்கள் மீது போலியாக பாலியல் புகார் கூறிய பிரித்தானிய இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை அயியா நாபாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், இஸ்ரேலிய நாட்டை சேர்ந்த 12 இளைஞர்கள் தன்னை கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக, பிரித்தானியாவை சேர்ந்த 19 வயது இளம்பெண் பொலிஸில் புகார் கொடுத்தார்.
இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து 16 முதல் 18 வயதிற்குட்பட்ட 12 இளைஞர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இளம்பெண் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பொய் புகார் கொடுத்த 19 வயது இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதேசமயம் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய இளைஞர்களை நீதிமன்றம் விடுத்துள்ளது.