திருப்பதிக்கு செல்வதாக கிளம்பிய தம்பதி… அவர்கள் மகனுக்கு வந்த செய்தி.!

தமிழ்நாட்டில் வறுமை காரணமாக ஒரு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி தாலுகா லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி சுலோச்சனா. இவர்கள் வறுமை காரணமாக அவதிப்பட்டு வந்தனர். மேலும் ஏழுமலைக்கு உடல்நிலை பாதிப்பும் இருந்தது.

இந்தநிலையில் ஏழுமலையும், அவரது மனைவியும் திருப்பதி கோவிலுக்கு செல்வதாக மகனிடம் கூறிவிட்டு சென்றனர்.

பேருந்தில் சென்ற அவர்கள் நகரியில் இறங்கினார்கள். அங்குள்ள ஒரு பாலத்துக்கு நடந்து சென்றனர்.

பாலத்தின் கீழ் அமர்ந்த கணவன்-மனைவி இருவரும் வி‌ஷம் குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்ததும் பொலிசார் அங்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தம்பதியின் மகனுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இருவரின் தற்கொலைக்கு வறுமை தான் காரணம என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.