டில்லி ஐஐடியில் பணியாற்றி வரும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ள விவகாரம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் டில்லியில் உள்ள பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்களுல் ஒன்றான ஐஐடி (இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி) வளாகத்திற்குள் வசிக்கும் வசித்து வருபவர், குல்ஷன் தாஸ். இவர் அங்குள்ள ஆய்வகத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார். அந்த வளாகத்திற்குள் உள்ள குடியிருப்பில், மனைவி மற்றும்த தாய் காம்தா ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், 3 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்கள் தற்கொலைக்கான காரணம் ஏதும் தெரியாத நிலையில், அவர்களின் சொந்த ஊரான அரியானாவிற்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்துகொண்ட குல்ஷனும் சுனிதாவும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.