பூமி­யி­லி­ருந்து வெளியே வந்த நந்­தி­தேவர்

இந்­தி­யாவின் கர்­நா­டகா மாநிலம், மைசூரு தாலுகா ஜெயப்­புரா அரு­கே­யுள்ள கிரா­மத்தில் பூமிக்­க­டி­யி­லி­ருந்து பழைமை வாய்ந்த நந்தி தேவரின் சிலைகள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

இந்தக் கிரா­மத்தில் பூமிக்கு அடி­யி­லி­ருந்து கொம்பு முளைத்­தது போன்று சில தட­யங்கள் வெளியில் தென்­பட்­டன. இதற்கு கடந்த 40 ஆண்­டு­க­ளாக அந்­தப்­ப­குதி மக்கள் சிறப்பு பூஜை செய்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் அது நந்தி தேவர் சிலை­யாக இருக்­கலாம் என்று கரு­திய மக்கள் அந்­தப்­ப­கு­தியில் குழி­தோண்டி அதனை வெளியே எடுக்க முடிவு செய்­தனர்.

இதன்­படி, பொக்லைன் இயந்­தி­ரத்தின் உத­வி­யுடன் 15 அடி ஆழத்தில் குழி தோண்­டப்­பட்­டது. அப்­போது பழைமை வாய்ந்த நந்தி தேவர் சிலைகள் காணப்­பட்­டது. இதனை பார்த்த மக்கள் அப்­ப­குதி மக்கள் தொல்­பொருள் ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு தகவல் தெரி­வித்­தனர்.

தொல்­பொருள் ஆராய்ச்­சி­யா­ளர்கள் சம்­பவ இடத்­துக்கு சென்று சிலை­களைப் பார்­வை­யிட்­டனர். பின்னர் சிலை­க­ளுக்கு எந்தச் சேதமும் ஏற்­ப­டாத வகையில் பூமிக்­க­டியில் இருந்த 2 நந்தி தேவர் சிலை­க­ளையும் பத்­தி­ர­மாக வெளியே எடுத்­தனர். அதில் ஒன்று 15 அடி உய­ரமும், மற்­றொன்று 12 அடி உய­ரத்­திலும் இருந்­தது.

இது­கு­றித்து தொல்­பொருள் துறை அதி­காரி ஒருவர் தெரிவிக்கையில்,

குறித்த சிலைகள் 150 ஆண்­டுகள் பழைமை வாய்ந்­த­வை­யாகும். இவை சாம­ரா­ஜேந்­திர உடையார் காலத்தில், மேலே எடுக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டது. ஆனால் அச்சம­யத்தில் தொடர்ந்த கன­ம­ழையால் வெளியே எடுக்க முடி­ய­வில்லை.

இதனால், அச்­சி­லைகள் மண்ணால் மூடப்­பட்­டு­விட்­டன. நந்தி சிலைகளின் கொம்புகள் மட்டும் வெளியே தெரிந்த படி இருந்தன. இந்த நந்தி சிலைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.