இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தமிழக இளைஞர்களின் செயலால் வேதனை அடைந்துள்ளார்.
இந்தியாவிலே சினிமா நடிகர்களை அளவிற்கு மீறி கொண்டாடும் ரசிகர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களே, அதில், குறிப்பாக அஜித்-விஜய் ரசிகர்கள் மோசம் என்றே கூறலாம். இருவரின் ரசிகர்களும் சமூக வலைதளங்கில், நடிகர்களை தனிப்பட்ட முறையில் கிண்டலடித்து போட்டி போட்டு டிரண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது விஜய் பாடல் சாதனையை அஜித்த பாடல் முறியடித்ததை கொண்டாடும் வகையில் #RIPactorVIJAY என்ற ஹஷ்டேக்கை, அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் இந்தியா அளவில் டிரண்ட் ஆக்கி வருகின்றனர்.
இதனால், வேதனை அடைந்த இந்திய வீரரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான ரவிச்சந்திரம் அஸ்வின், தமிழக இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் ட்விட் ஒன்று பதிவிட்டுள்ளார்.
அதில், சில நாட்களுக்கு முன்பு நமது கிரகத்தின் மீது மோதவிருந்த பெரிய பாறை தவறியது,ஒழுங்கற்ற பருவமழை வெவ்வேறு நகரங்களைத் தாக்கி வருகிறது, நம் நாட்டின் பல பகுதிகளில் வறட்சி மற்றும் மிகவும் மோசமான கிரிமினல் வழக்குகள் பேசப்படுகின்றன.
There was an asteroid that missed hitting our planet a few days ago, irregular monsoons hitting different cities, droughts in many parts of our country and very disturbing criminal cases being spoken, but the young generation of our lovey state manage to trend this #RIPactorVIJAY
— Ashwin Ravichandran (@ashwinravi99) July 29, 2019
ஆனால் நமது அருமையான மாநிலத்தின் இளம் தலைமுறை இந்த #RIPactorVIJAY டிரண்ட் செய்து வருகின்றனர். இதுப்போன்ற செயல்களை நாம் முதலில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அஸ்வின் கோரியுள்ளார்.