சவுதி மன்னர் சல்மானின் மூத்த சகோதரர் இளவரசர் பந்தர் 96 வயதில் காலமானார்.
இளவரசர் பந்தர் பின் அப்துல்ஸீஸ் அல்-சவுத் மறைந்த மன்னர் அப்துல்அஜிஸ் அல் சவுத்-ன் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசர் பைசல் பின் துர்கி பின் பைசல் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் இளவரசர் பந்தரின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.
இளவரசர் பந்தரின் மூன்று மகன்களும் சவுதியில் முக்கியமான பதவிகளை வகிக்கிறார்கள்: இளவரசர் பைசல் பின் பந்தர் ரியாத்தின் ஆளுநராகவும், இளவரசர் அப்துல்லா பின் பந்தர் தேசிய காவலருக்கு தலைமை தாங்குகிறார் மற்றும் இளவரசர் காலித் பின் பந்தர் மன்னர் சல்மானின் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.
திங்களன்று மக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் இஷா பிரார்த்தனைக்குப் பிறகு இறுதி பிரார்த்தனை செய்யப்படும் என்று சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரச குடும்பத்தைச் சேர்ந்த 96 வயதான மூத்த உறுப்பினர் பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். 1923-ல் பிறந்த இளவரசர் பந்தர் தனது வேண்டுகோளின் பேரில் நாட்டில் எந்த பதவியையும் ஏற்கவில்லை. இளவரசரின் மறைவுக்கு அரவு நாடு தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.