பிரித்தானியாவில் வசித்த போது அதிகளவு சூதாட்டத்தில் ஈடுபட்டதால் தன் வாழ்க்கை மோசமான நிலைக்கு சென்றதாக பிரபல நடிகர் விவேக் தாஹியா கூறியுள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் விவேக் தாஹியா. அவரின் மனைவி பிரபல தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா த்ரிபாதி.
விவேக் ஒரு காலத்தில் சூதாட்டத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், 2006ம் ஆண்டு எனக்கு 19 வயது இருந்தபோது நான் சூதாட்டத்திற்கு அடிமையாகிவிட்டேன்.
நான் பிரித்தானியாவில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது பகுதி நேரமாக வேலை பார்த்தேன்.
ஒரு நாள் என் நண்பன் கசினோவுக்கு அழைத்துச் சென்றார். முதல் நாளே நான் பணம் வென்றேன். நான் ஒரு வாரம் உழைத்தால் கிடைக்கும் பணத்தை அன்று ஒரே நாளில் வென்றேன். கசினோ அதன் பிறகு வேலை முடிந்த பிறகு நேராக கசினோவுக்கு சென்றுவிடுவேன்.
ஒரு மாத சம்பளத்தை அப்படியே வைத்து சூதாடியிருக்கிறேன். ஒரு முறை சூதாட பணம் இல்லாததால் என் கார் சாவியை ஒருவரிடம் அளித்து பணம் கேட்டேன்.
ஒரு முறை வாடகை காரில் சென்று கொண்டிருந்தேன். அந்த காரின் ஓட்டுனர் வங்கதேசத்தை சேர்ந்தவர். அவர் தன் வாழ்வில் நடந்ததை தெரிவித்தார். குடும்பம் கேப் டிரைவர் படிப்பறிவு இல்லாதவர். பிரித்தானியாவுக்கு வந்து கேப் ஓட்டி பணம் சேர்த்து சொந்தமாக ஒரு வாகனம் வாங்கியுள்ளார்.
அதன் பிறகு இந்திய பெண்ணை திருமணம் செய்துள்ளார். கடினமாக உழைத்து 7 கேப்கள் வாங்கியுள்ளார். இந்நிலையில் அவரின் நண்பர் ஒருவர் அவரை கசினோவுக்கு அழைத்துச் செல்ல சூதாட்டத்திற்கு அடிமையாகி சம்பாதித்த அனைத்தையும் இழந்துவிட்டார்.
இதையடுத்து அவரின் மனைவி 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரை விட்டுச் சென்றுவிட்டார். அவர் கூறியதை கேட்ட பிறகு நான் கசினோவுக்கு செல்வதை நிறுத்திவிட்டேன்.
சூதாட்டம், போதைப் பொருளுக்கு அடிமையாக உள்ள வாலிபர்கள் அதை மறுக்காமல் உரிய உதவியை தேடிச் சென்று குணமடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.