தமிழகத்தில் அடுத்த உதயம்…….

முன்னதாக நடைபெற இருந்த வேலூர் தேர்தல் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கூறியதால், தடுத்து நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் தேர்தல் நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக சார்பாக ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களே மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில், ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் கதிர் ஆனந்திற்கு ஆதரவாகவும், ஏசி சண்முகத்திற்கு ஆதரவாக எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இடையில் உள்ளதால் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஏசி சண்முகத்திற்கு ஆதரவாக வேலூர் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்பொழுது அவர், “இந்தியாவில் வேலூர் தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்டது ஏன் தெரியுமா.?

வாக்காளருக்கு கொடுக்க கட்டுக்கட்டாக துரைமுருகனுக்கு சம்பந்தப்பட்ட இடத்தில், வைக்கப்பட்டு தான் காரணம். இதற்கான ஆதாரம் அனைத்துமே தேர்தல் ஆணையத்திடம் இருக்கின்றது. இந்த வழக்குகள் அனைத்தும் விசாரணைக்கு வரும் போது எதிர்கொள்ள தயாராகுங்கள்.

நான் ஒரு விவசாயி, விவசாயி ஆளக்கூடாதா.? விவசாயிகளையும், தொழிலாளர்களையும் இந்த அரசு காத்து வருகிறது. இறைவன் எங்கள் பக்கம் இருக்கின்றார். இருபெரும் தலைவர்கள் எங்களை ஆசிர்வதித்து கொண்டு இருக்கின்றனர். திமுக வாரிசு அரசியலில் தற்போது உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்துள்ளனர்.

விரைவில் கே.வி குப்பம் தனி தாலுகாவாக அறிவிக்கப்படும் என கூறிய எடப்பாடி, ஸ்டாலினிற்கு பதவி வெறி” என கூறியுள்ளார்.