24ம் புலிகேசி பிரச்சனையில் திருப்பம்! ரசிகர்கள் அதிர்ச்சி…

வடிவேலு நடித்து சூப்பர்ஹிட் ஆன 23ம் புலிகேசி படத்தின் அடுத்த பாகம் 24ம் புலிகேசி சென்ற ஆண்டு துவங்கப்பட்டது. சிம்புதேவன் இயக்கும் அந்த படத்தினை இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். ஷூட்டிங் துவங்கிய சில நாட்களிலேயே வடிவேலு படக்குழுவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் வெளியேறிவிட்டார். அதனால் படத்திற்காக அதிக செலவில் போடப்பட்ட செட் வீணானது.

இதனால் பலகோடி நஷ்டம் ஏற்பட்டதாக ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இது பற்றி பேச பலமுறை அழைத்தும் வடிவேலு வராததால் அவருக்கு சங்கத்தில் ரெட் கார்டு போடப்பட்டது.

இந்த பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வந்த நிலையில் தற்போது வடிவேலு-ஷங்கர் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதில் ட்விஸ்ட் என்னவென்றால் 24ம் புலிகேசி இனி துவங்காது. ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் விதத்தில் ஷங்கருக்கு இரண்டு படங்கள் சம்பளம் வாங்காமல் வடிவேலு நடித்து கொடுப்பார் என கூறப்படுகிறது.

24ம் புலிகேசி படத்தை அதிகம் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.