எல்லா அம்மாக்களையும் போலவே, எப்போதும் வீடியோ கேமிலேயே முழ்கிக் கிடந்த பிரித்தானிய சிறுவன் ஒருவனின் அம்மாவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் அந்த சிறுவன் அதே வீடியோ கேமில் வென்ற பணத்தாலேயே இன்று கோடீஸ்வரனாகியிருக்கிறான்.
Essexஐச் சேர்ந்த Jaden Ashman (15)இன் தாய் Lisa, தன் மகன் எப்போதும் வீடியோ கேமிலேயே மூழ்கிக் கிடப்பதைக் கண்டு கவலை அடைந்திருக்கிறார்.
மணிக்கணக்காக Lisa மகனிடம் வீடியோ கேம் விளையாட வேண்டாம் என்று கெஞ்சியிருக்கிறார்.
எவ்வளவு சொல்லியும் இந்த பையன் கேட்க மாட்டேன்கிறானே, இவனது எதிர்காலம் என்ன ஆகும் என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்த அம்மாவின் கவலைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறான் Jaden.
ஆம், அவன் வென்றுள்ள தொகையை வைத்து அவன் பல்கலைக்கழக படிப்பை முடிக்கலாம், படித்து முடித்ததும் ஒரு வீடு கூட வாங்கி விடலாம். அவன் வென்றுள்ள பரிசுத்தொகை 900,000 பவுண்டுகள்.
இத்தனைக்கும் அவன் முதல் பரிசு பெறவில்லை, இரண்டாவது பரிசுதான் பெற்றான், அதுவும் இரண்டாவது பரிசு இருவருக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
இரண்டாவது பரிசு பெற்ற இருவருக்கும் சேர்த்து 1.8 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைக்க, ஆளுக்கு 900,000 பவுண்டுகள் கிடைத்துள்ளன.
இவ்வளவு நாள் படிப்பு என்னவாகும், எதிர்காலம் என்னவாகும், இப்படி எப்போது வீடியோ கேமிலேயே மூழ்கிக் கிடக்கிறாயே என வாதாடிய அம்மாவின் வாயை அடைத்திருக்கும் Jaden, கோடீஸ்வரனாகி அம்மாவை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்திருக்கிறான்.