அதிகாலை 3 மணிக்கு தூங்கி எழுந்த புதுப்பெண்! அடுத்து நடந்த சம்பவம்..

இந்தியாவில் திருமணமான 18 நாளில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் சப்னா தேவி (21). இவருக்கும் சந்தீப் சிங் என்ற இளைஞருக்கும் கடந்த 18 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு வீட்டில் இருந்தவர்கள் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் எழுந்த சப்னா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து சப்னாவின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

சப்னா எதற்காக இம்முடிவை எடுத்தார் என தெரியாத நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சம்பவம் நடக்கும் போது சப்னாவின் கணவர் சந்தீப் வேறு ஊரில் தனது பட்டப்படிப்பு தொடர்பான விடயம் காரணமாக தங்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.