ரஷ்ய ஜனாதிபதி புடின் கடலில் நீர் மூழ்கி கப்பல் ஒன்றில் செல்லும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
கடந்த சில தினங்களாகவே ரஷ்ய ஜனாதிபதி புடின் கடலில் ஒரு நீர்முழ்கி கப்பல் ஒன்றில் இருந்து கொண்டு ஏதோ பார்ப்பது போன்று இருக்கும் புகைப்படங்கள் வைரலாகின.
இதனால் அது என்ன புகைப்படம் என்று ஆராய்ந்த போது, கடந்த 28-ஆம் திகதி ரஷ்யாவின் கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அப்போது ஜனாதிபதி புடின் சிறிய ரக நீர்மூழ்கி கப்பலில் சென்று, இரண்டாம் உலகப்போரின் போது கடலில் மூழ்கிய சோவியத் நீர்மூழ்கிக் கப்பலை பார்வையிட்டுள்ளார்.
அதற்காக செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து 180 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கோக்லாந்து தீவிற்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து சிறிய வகை நீர்மூழ்கி கப்பலில் பின்லாந்து வளைகுடா பகுதிக்கு சென்றடைந்த அவர், சுமார் 50 அடி கடல் ஆழத்தில் மூழ்கி இருந்த நீர்மூழ்கி கப்பலை பார்த்துள்ளார்.
அதன் பின் இது குறித்து அவர், ரஷ்ய கடற்படை தினம் கொண்டாடப்படுவதால், தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்து கொள்வதாகவும், ரஷ்ய மக்கள் எந்த அளவிற்கு உழைப்பாளி மற்றும் அவர்களின் மிகத் துரிதமான பணிகளை புரிந்து கொள்வதற்காகவே இருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய இந்த சிறிய வகை நீர்மூழ்கி கப்பலில் கடலில் 50 அடிவரை உள்சென்று, பார்வையிட்டதாக கூறியுள்ளார்.