தமிழ்நாட்டில் மனைவிக்கு தெரியாமல் வேறு பெண்ணுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்த அரசு அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரத்தில் தமிழக சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கும் ஹொட்டலில் மேலாளராக யுவராஜ் என்பவர் சில மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார்.
இவருக்கு ரேகா என்ற மனைவியும் 3 வயதுக் குழந்தையும் உள்ளனர்.
இவர் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13-ம் திகதி பணிக்குச் சென்ற யுவராஜ் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து ஹொட்டல் தமிழ்நாட்டுக்கு கணவரை காண சென்ற ரேகாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு யுவாராஜ் இல்லாதத்தை கண்ட ரேகா, நான் தான் அவர் மனைவி என கூறிய நிலையில், ஹொட்டல் வளாகத்தில் உள்ள மேலாளருக்கான குடியிருப்பில் கவிதா என்ற பெண்ணை தன் மனைவி எனக் கூறி அவருடன் யுவராஜ் தங்கியிருந்ததாக ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து பொலிசில் தனது கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு ரேகா புகாரளித்தார். விசாரணையில் சென்னை சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய கவிதாவுக்கும் யுவராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யுவராஜ் ராமேஸ்வரத்தில் மேலாளர் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட யுவராஜ், ஏற்கெனவே திருமணமான கவிதாவை தன் மனைவி எனக் கூறி தனது குடியிருப்பில் தங்க வைத்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் யுவராஜ் தொடர்ச்சியாக வீட்டுக்கு வராமல் போகவே இந்த விவகாரம் வெளிப்பட்டுள்ளது.
இந்த சூழலில் யுவராஜை சுற்றுலா துறை நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.