உலகில் காய்கறி வகை உற்பத்தியில் ஆக கூடுதலான நச்சுத் தன்மை கொண்ட காய்கறி உற்பத்தி நாட்டில் இடம்பெறுவதாக விவசாய நீர்பாசண கிராமிய பொருளாதாரம் மற்றும் கடற்தொழில் மற்லும் நீரியல்வள அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தொற்றா நோயினால் பெரும் எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக உணவு வேலைத் திட்டத்திற்கு அமைவாக விவசாய திணைக்களம் அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்காக உற்பத்தி செய்யப்படும் அரிசியை பயன்படுத்தி இலவசமாக பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகின்றது.
வருடம் ஒன்றில் காய்கறி வகைகளுக்காக 3 லெட்சம் மெக்றிக்தொன் உரவகை பயன்படுத்தப்படுகின்றது. இதே போன்று கிருமி நாசினி பொருட்கள் 5 ஆயிரம் தொன் பயன்படுத்தப்படுகின்றது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.