மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
ஜான்வியின் முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த இஷான் கட்டார் உடன் அவர் காதலில் இருப்பதாக அதிகம் கிசுகிசுக்கப்படுகிறது. அவர்கள் ஜோடியாக வெளியில் சுற்றும் புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகின்றன.
இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்த ஜான்வியின் தந்தை போனி கபூர், “ஆம், இஷான் மற்றும் ஜான்வி ஒன்றாக படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் நண்பர்கள் ஆகியிருப்பார்கள். நான் என் மகளை மதிக்கிறேன், அவரது நட்பையும் தான்” என கூறியுள்ளார்.






