சைப்பிரஸில் நேற்றைய தினம் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் கத்திக்குத்துக்கிலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகமான ‘சைப்பிரஸ் மெய்ல்’ செய்தி வெளியிட்டுள்ளது.
சைப்பிரஸின், லிமாசோலின் சாக்காய் பகுதியில் உள்ள வீடொன்றில் பணிபுரிந்து வந்த 49 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த பெண்ணிற்கும் 47 வயதுடைய அவரது முன்னாள் கணவருக்குமிடையில் விவகாரத்து விடயம் தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் லிமாசோலில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் அடிவயிறு, தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கயாங்களுக்குள்ளான பெண், லிமாசோல் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந் நிலையில் சந்தேக நபர் சைப்பிரஸ்ஸை விட்டு வெளியேற முயன்றபோது இன்றைய தினம் அதிகாலை லர்னகா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.