பிக்பாஸில் சேரன் மீது பொய்யான பாலியல் புகார் கூறியிருந்தவர் மீரா மிதுன். இதனால் சேரனுக்கு ஆதரவாக மொத்த பார்வையாளர்களும் நிற்க மீரா கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார்.
வெளியே வந்த பின், ஹாட் போட்டோஷூட் நடத்தி இணையத்தள பக்கங்களில் பதிவேற்றும் தனது பழக்க வழங்கங்களை மீண்டும் தொடங்கியிருக்கும் அவர், சமீபத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து நேரலை ஒன்றில் பேசியும் உள்ளார்.
இதற்கிடையில் மீராவை சேரனின் மனைவி செல்வராணி சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின்போது இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.