இந்தியாவின் மேற்கு வங்கத்தில் அரங்கேற்றப்பட்டுள்ள தொடர் இரட்டைக் கொலை நாட்டையே கடுமையாக உலுக்கியுள்ளது.
வட இந்தியாவில் சைக்கோ கொலைகாரர்கள் இரவில் நடைபாதையில் படுத்துறங்குபவர்களைக் கொல்வதாக வந்த செய்தியை அடுத்து பெருமளவில் மக்கள் பீதியில் உறைந்தனர்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தம்பதியர்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களை துண்டுகளாக்கி சூட்கேஸில் அடைக்கப்பட்ட சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பிரதீப் மற்றும் அல்பனா பிஸ்வஸ் என்கிற தம்பதியினர் தங்கியிருந்த வீட்டிற்கு அந்த வீட்டின் உரிமையாளர் அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
அப்படி ஒரு முறை போன் பண்ணும்போது அந்த தம்பதியினர் அழைப்பை ஏற்காததால், அவர் நேரில் சென்று பார்த்துள்ளார். ஆனால் அப்போது அந்த தம்பதியினரை அந்த குடியிருப்பில் காணவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து பிரதீப்பின் தம்பிக்கு அவர் அளித்த தகவலின் பேரில், அவர் வந்து தேடியபோதுதான் சூட்கேஸில் தம்பதியர்கள் அடைத்து, கழிவறையில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதேபோல் இந்த சம்பவத்துக்கு அடுத்த நாள், மேற்குவங்கத்தின் நரேந்திரபூரில் திலிப் மற்றும் ஸ்வப்னா முகர்ஜி தம்பதியரும் இரட்டைப்படுகொலை செய்யப்பட்டனர்.
அதில், கணவர் திலிப் படுக்கை அறையிலும், மனைவி ஸ்வப்னா கதவு வாசலில் கயிற்றால் நெரிக்கப்பட்டும், தொண்டை வரை பைப் ராடு திணிக்கப்பட்டும் சடலமாக மீட்கப்பட்டனர்.
மேற்கு வங்கத்தை உதற வைத்த இந்த இரண்டு இரட்டைப் படுகொலை சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.