பிக்பாஸ் வீட்டில் இன்று மொட்ட கடிதாசி டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்தார். அதன் படி போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளர்களிடம் என்ன கேள்வி கேட்கிறீர்களோ அதை இந்த கடிதத்தில் எழுதுங்கள், உங்கள் பெயர் வேண்டாம் என்று கூறியிருந்தார்.
அதன் படி போட்டியாளர்கள் பலரும் மொட்ட கடிதம் எழுதி பலருக்கும் கேள்வியை வைத்தனர்.
அதன் பின் ரேஷ்மா மற்றும் அபிராமி பேசிக் கொண்டிருந்த போது, முகன் என்னிடம் சிங்கிள்ளாக இருந்தால், காதலித்திருப்பேன் என்று கூறினான்.
அதன் பின் நான் நல்ல பிரண்டாக இருப்பேன் என்று கூறினேன். அதுமட்டுமின்றி அவன் தன்னுடைய 19 வயது வரை எந்த ஒரு இதையும் அனுபவிக்கவில்லை என்று கூறினான்.
ஒரு தந்தை இல்லாமல் வளர்வது மிகப் பெரிய விஷயமல்ல, அவன் பல கஷ்டங்களை தன்னுடைய சிறுவயதில் இருந்தே அனுபவித்துள்ளான்.
அதை எல்லாம் நினைக்கும் போது, கொஞ்சம் பெருமையாக இருக்கிறது என்று கூறி முடித்தார்.