பேஷன் ஷோவில் கவர்ச்சி ஆடையில் கேட் மிடில்டன்!

தாங்கள் காதலர்களாக இருந்த காலத்தில் எவ்வாறு அன்போடு இருந்தார்களோ, அதே அன்போடு சற்றும் குறையாமல், தற்போது திருமணமாகி குழந்தை பெற்ற பின்னரும் கூட, தங்கள் இல்லற வாழ்க்கையை நல்லறமாய் நடத்தி பிரித்தானியாவின் சிறந்த தம்பதிகளாக வலம் வருகின்றனர் பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன்.

பிரித்தானிய அரசகுடும்பத்தில் முடிசூடும் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் இளவரசர் வில்லியம்.

இவர் ஒரு அரச குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தபோதிலும், தங்கள் குடும்பத்திற்கு இணையாக இருக்கும் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்ணின் மீது காதல் கொள்ளவில்லை.

மாறாக நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கேட் மிடில்டன் என்பவரை காதலித்து மணந்துள்ளார். கல்லூரியில் படிக்கும் இவர்களது காதல் துளிர்விட்டுள்ளது.

2001ம் ஆண்டு ஆண்ட்ரூ பல்கலைகழகத்தில் தான் மிடில்டனை சந்தித்தார் இளவரசர் வில்லியம்.

அந்த கல்லூரியில் இருவரும் வெவ்வேறு துறை சார்ந்த படிப்பினை பயின்று வந்துள்ளார்கள்.

வில்லியம் நிலவியல் சார்ந்த படிப்பினையும், மிடில்டன் கலை வரலாறு சார்ந்த படிப்பனையும் பயின்று வந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் விளையாட்டு மிகவும் பிடிக்கும் என்பதால், கல்லூரியில் ஒன்றாக சேர்ந்து விளையாடும்போது ஒருவரையொருவர் சந்தித்து நட்புறவுடன் பழகியுள்ளனர்.

பல்கலைக்கழத்தின் ஒருமுறை நடைபெற்ற பேஷன் ஷோவில் கலந்துகொண்ட, கேட் மிடில்டனின் கவர்ச்சியான ஆடையை பார்த்து வில்லியம் ஷாக் ஆகிட்டாராம்.

200 பவுண்ட் செலுத்தி டிக்கெட் வாங்கி, இந்த நிகழ்ச்சியை தனது நண்பருடன் சேர்ந்து பார்த்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு இவர்கள் இருவரின் பல்கலைக்கழக படிப்பு முடிந்தது. அதன்பின்னர் வில்லியம் இராணுவத்துறையில் பணியாற்றுவதற்காக சென்றுவிட்டார்.

இதில், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவர்கள் இருவரும் டேட்டிங் சென்றது, அந்நாட்டு ஊடகங்களின் கமெராவுக்குள் சிக்கியது. இதன் மூலம் இவர்கள் இருவரின் காதல் வெளி உலகத்துக்கு தெரியவந்தது.

இவர்களின் திருமணத்திற்கு பிரித்தானிய மாகாராணி எலிசபெத் அவர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து, 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி திருமண பந்ததத்தில் இணைந்தனர்.

இல்லறமே நல்லறமாய் நடத்தி வரும் இந்த தம்பதியினருக்கு ஜோர்ஜ், சார்லோட் மற்றும் லூயிஸ் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.