பிக் பாஸ் நிகழ்ச்சியே ஒரு திட்டமிட்ட சதி எனவும் அங்கு நடப்பது எல்லாமே ஸ்கிரிப்ட் எனவும் இயக்குனர் மனோபாலா தெரிவித்துள்ளார்.
பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
பிக் பாஸில் பேசப்படும் வார்த்தைகள் கூட யாரே ஒருவர் எழுதி கொடுத்த வசனங்களாகதான் இருக்கும்.
சேரனை போல உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் என்ன ஒரு சூழல் வந்தாலும் பிக் பாஸ் வீட்டுக்கு போயிருக்க கூடாது. இனி இப்படி பண்ணாதீர்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர்கள், நடிகைகள் மாத்திரம் தானே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.
சமூக ஆர்வலர்களே அல்லது பொதுமக்களே பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கின்றார்களா? என்றும் கேள்வி எழுப்பினார். இப்படி இருக்கும் நிலையில் அங்கு உள்ளவர்கள் நடிப்பதாக உறுதியாக கூறியுள்ளார்.
இதேவேளை, சேரன் மீராவை தவராக தொட்டதாக கூறிய விடயம் பொய், அப்படி எல்லாம் நடந்திருந்தால் பொது மக்கள் வெளிய வந்தா செருப்ப வச்சு அடிக்க மாட்டாங்களா என்றும் மனோபாலா கேள்வி எழுப்பியுள்ளார்.