சாக்‌ஷிக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிடுச்சா..?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியவர் நடிகை வனிதா விஜயக்குமார். இவர் வெளியேறியதிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரச்சனை ஏற்படுத்தும் அளவிற்கு போட்டியாளர்கள் யாரும் இல்லை என பார்வையாளர்கள் வருத்தப்பட்டனர்.

அப்போது தான், மீரா ஒரு புதிய பிரச்சனையை கிளப்பினார். அதன் பின்பு, பிக்பாஸ் வீடே கலவர களமாக மாறியது. இதனால் மீரா மீதுன் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு மீராவையும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினர்.

இந்நிலையில், இந்த வாரம் புதிய புதிய பிரச்சனையாக, கவின், சாக்‌ஷி காதல் பிரச்சனை தொடங்கியது.

இதன் பின்பு, கவினுக்கும், சாக்‌ஷிக்கும் வாக்குவாதங்கள் முற்றிய நிலையில், கடைசியாக கவின் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு இந்த வாரம் நான் வெளியேறிவிடுகிறேன் என்று கூறினார்.

இந்நிலையில், சாக்‌ஷி குறித்த அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

 

சாக்க்ஷி தமிழில் ராஜா ராணி, காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாக்க்ஷி. இவ்வளவு தான் சாக்க்ஷியை பற்றி பலரும் அறிந்தது.

ஆனால், இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டே திருமணம் முடிந்துவிட்டதாகவும் பின்னர் சில வருடங்களிலேயே விவாகரத்தும் ஆகிவிட்டதாகவும் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதாவிடம் சாக்க்ஷி விவாகரத்து பெற்றவர் என்று ரசிகர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள டுவீட் செய்துள்ள வனிதா, அவருக்கு திருமணமே ஆகவில்லை பின்பு எப்படி விவாகரத்து. இது போன்ற ஆதாரமற்ற வதந்திகளை தேவையில்லாமல் பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.