தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தினை பயன்படுத்தியமைக்காக தற்காலிக தடையை எதிர்கொண்டுள்ள இந்திய அணியின் இளம்வீரர் பிரித்வி சா குறித்து இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜொவ்ரா ஆர்ச்செர் நான்கு வருடங்களிற்கு முன்னர் டுவிட்டரில் பதிவு செய்துள்ள கருத்து பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2015 செப்டம்பர் மாதத்தில் ஆர்ச்செர் தனது டுவிட்டரில் அதிஸ்டமில்லாத சா என பதிவு செய்துள்ளார்.
பிரித்தவி சாவி;ற்கு இந்திய கிரிக்கெட்அ கட்டுப்பாட்டுச்சபை தடை விதித்துள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் இந்த டுவிட்டை கண்டுபிடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் ஜொவ்ரா ஆர்ச்சரின் 2015 டுவிட்டிற்கு கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்.
உலகம் எப்படி முடியப்போகின்றது என தெரிவிக்குமாறு ஆச்சரை இந்திய ரசிகர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீங்கள் என்ன உணவு உண்கீறீர்கள் என ரசிகர் ஒருவர் வேடிக்கையாக கேள்வி எழுப்பியுள்ள அதேவேளை மற்றொரு இரசிகர் ஆர்ச்சர் தனது டுவிட்டரில் பதிவு செய்யாதா விடயம் ஏதாவது உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
24 வயது ஜெவ்ரா ஆச்சரின் டுவிட்டர் எதிர்வுகூறல்கள் பல நிஜமாகி வரும் நிலையிலேயே இந்த டுவிட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆர்ச்சர் உலக கிண்ணத்தின் சுப்பர் ஒவர் குறித்தும் தனது டுவிட்டில் எதிர்வு கூறியிருந்தார்.