நடிகர் விக்ரம் மிக கவனமாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரின் திறமையும், கடும் உழைப்பும் படங்களில் நன்றாக தெரியும். அவரின் கேரக்டர்களே அதை காட்டும்.
அண்மையில் அவரின் நடிப்பில் கடாரம் கொண்டான் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அடுத்ததாக அவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் அவர் 25 கெட்டப்களில் கலக்கப்போகிறார். இதுவரை எந்த நடிகரும் செய்யாத விசயத்தை அவர் செய்கிறாராம். இந்த கெட்டப்பாக அமெரிக்காவில் அமெரிக்காவை சேர்ந்த முக்கிய நிறுவனம் ஒன்று பணியாற்றுகிறதாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் இப்படத்தை அடுத்த வருடம் 2020 ஏப்ரலில் வெளியாகவுள்ளது.