இந்திய சரக்கு கப்பலில் இருந்தவர்களிடம் உதவி கேட்டு கதறிய மாலத்தீவு அதிபர் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மாலத்தீவில் கருங்கல் இறக்கிவிட்டு இந்திய சரக்கு கப்பல் நாடு திரும்பிக் கொண்டிருந்த போது, திடீரென படகில் வந்த நபர் ஒருவர் சரக்கு கப்பலை நடுக்கடலில் வழிமறித்திருக்கிறார்.
அப்போது அந்த படகில் இருந்த நபர் தன்னை காப்பாற்றி செல்லுங்கள், நான் மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர், நான் இந்த நாட்டில் இருந்தால் என்னை கொலை செய்துவிடுவார்கள், என்னை காப்பாற்றுங்கள் என்று கதறியுள்ளார்.
முன்னாள் துணை அதிபர் என கூறியதால் மீண்டும் மாலத்தீவிற்கு அழைத்துச் சென்றால் ஏதேனும் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறி, அவரைஇந்தியா நோக்கி அழைத்து வந்துள்ளனர்.
அப்போது தூத்துக்குடி துறைமுகத்தை அடைவதற்கு முன்னதாக சரக்கு கப்பலில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் தமது நிறுவன உரிமையாளருக்கு இந்த அதிபர் குறித்து கூறியுள்ளார்.
இதனால் கடலோர காவல் படை மற்றும் உளவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு முன்னதாக கப்பலில் ஏறி சோதனை நடத்தி அதன் பின் அகமது அதிப்பை கைது செய்தனர்.